ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கொரோனா தடுப்பு மருந்துகளை அதிக அளவில் வீணாக்கி இருப்பது மத்திய அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு எனப் பல மாநிலங்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில் ஒருசில மாநிலங்களில் அதை வீணாக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் 6 புள்ளி 3 விழுக்காடு தடுப்பு மருந்து வீணாகியுள்ளதாகவும் அதை ஒரு விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதிக அளவில் தடுப்பு மருந்தை வீணாக்கிய மாநிலங்களின் பட்டியலில் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகியன முதல் மூன்று இடங்களில் உள்ளன. மத்திய அரசின் இந்தத் தகவலை மறுத்துள்ள ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தங்கள் மாநிலத்தில் 4 புள்ளி 6 விழுக்காடே வீணாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.