உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் மனித உடல்கள் வீசப்படுவதை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கும் பணியை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்கள் கங்கை ஆற்றில் வீசி விட்டுச் சென்றனர். இவ்வாறு ஏராளமான உடல்கள் மிதந்ததால் கங்கை நதி விவாதப் பொருளாக மாறியது. இதையடுத்து வாரணாசி நிர்வாகம் சார்பில் 4 ட்ரோன்கள் கங்கையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
கரையின் இரு ஓரங்களில் பறக்கும் ட்ரோன், ஆற்றில் யாராவது கழிவுகளைக் கொட்டினால் அவரைப் படம் பிடித்து போலீசாரிடம் வழங்கும் என்றும், பின்னர் அந்த நபர் கடுமையாக எச்சரிக்கப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.