ஆந்திராவில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி, நூற்றுக்கணக்கானவர்களை பங்கேற்க வைத்து பிரார்த்தனை கூட்டம் நடத்திய பாதிரியார்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த பிரார்த்தனை கூட்டத்தில் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கோனோர் பங்கேற்றனர்.
தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். முன் அனுமதியின்றி கூட்டம் நடத்திய பாதிரியார்கள் மீது வழக்குப்பதிய முடியும் என எச்சரித்த போலீசார் பின்னர் மைக் மூலம் கூட்டத்தினரை கலைந்து போக கூறி அனைவரையும் அங்கிருந்து அனுப்பினர்.