பூஞ்சைத் தொற்றின் நிறங்களால் அச்சமடைய வேண்டாம் என பொதுமக்களை தொற்றுநோய் நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தொற்றுநோய் பிரிவு தலைவரும் மருத்துவருமான சமீரன் பாண்டா, பூஞ்சைத் தொற்றுகளை கருப்பு, மஞ்சள் என வேறுபடுத்திக் கூறுவதால் அதுகுறித்து மக்கள் அச்சமடைகின்றனர் என்றார்.
எந்த வகை பூஞ்சைத் தொற்றால் நோயாளி பாதிக்கப்பட்டுள்ளார் என்பது முதலில் கண்டறியப்பட வேண்டும் என்று கூறிய அவர், தீவிர, மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பெருவாரியான பூஞ்சைத் தொற்றுகள் உடல் உறுப்புகளில் ஊடுருவக் கூடியவை தான் என்றார்.