தங்களது உள்ளடக்கம் குறித்த அரசின் புதிய விதிகளை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய விதிகளை கடைப்பிடிக்க அரசு விதித்துள்ள கெடு இன்று முடியும் நிலையில் மேலும் விளக்கம் தேவைப்படும் விதிகள் குறித்து அரசுடன் பேச உள்ளதாக பேஸ்புக் கூறியுள்ளது.
அரசின் ஐ.டி விதிகளுக்கு உட்பட்டு, தேவையான மாற்றங்களை செய்யவும், மக்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வெளியிடவும் ஃபேஸ்புக் உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். செய்தி மற்றும் OTT சமூக தளங்களுக்கான விதிகளை கடந்த பிப்ரவரியில் அறிவித்த மத்திய அரசு, அவற்றை செயல்படுத்த 3 மாத கால அவகாசம் வழங்கியது.
ஆனால் இன்று வரை டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் ஆகியன புதிய விதிகளை ஏற்கவில்லை என அரசு தெரிவித்துள்ளதால்,அவை தடை செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.