கத்தார் நாட்டிலிருந்து 40 டன் திரவ ஆக்ஸிஜன் மும்பை கொண்டு வரப்பட்டது.
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் கடற்படை சார்பில் சமுத்திர சேது 2 என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளிலிருந்து திரவ ஆக்ஸிஜன் கொண்டு வரப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் தர்காஷ் என்ற கப்பல் மூலம் கத்தார் நாட்டிலிருந்து திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டு வரப்பட்டது. மும்பைக்கு வந்த இந்தக் கப்பலில் 760 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 10 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்றவை பஹ்ரைனிலிருந்தும் கொண்டு வரப்பட்டுள்ளன.