மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் உடலை குப்பை வண்டியில் தூக்கிப்போட்டு கொண்டு சென்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
தேவாஸ் மாவட்டத்தின் சொங்காச் நகரில் 21 வயது இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இறுதிச்சடங்கிற்காக அவரது உடலை ஈவு இரக்கமின்றி குப்பையை கொட்டுவது போல சில அரசு மருத்துவமனை ஊழியர்கள் குப்பை வண்டியில் உடலை தூக்கிப்போட்டு கொண்டு செல்லும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து உள்ளூர் சுகாதார அதிகாரி மற்றும் 3 தற்காலிக மருத்துவ பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.