சீனாவில் பெய்த ஆலங்கட்டி மற்றும் கனமழையில் சிக்கி 21 மராத்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.
கன்சு மாகாணத்தின் பைன் நகரில் உள்ள மலைப்பகுதியில் 100 கிலோமீட்டர் தொலைவுக்கான மராத்தான் போட்டி நடைபெற்றது. அப்போது பெய்த ஆலங்கட்டி மற்றும் கனமழையால் போட்டியில் பங்கேற்ற 172 பேரில், 21 பேர் உயிரிழந்ததாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மோசமான வானிலையிலும் அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்றுவருகிறது.