வங்க கடலில் உருவாகும் யாஸ் புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அம்மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றைக்குள் கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் மேலும் வலுவடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வடக்கு மற்றும் வடமேற்காக நகர்ந்து நாளை புயலாக உருமாறும் என்றும் பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் இது அதிதீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.