உலகிலேயே அதிக வெப்பமான இடம் என்ற சூடான பெயரை ஈரானின் லூட் பாலைவனம் தட்டிச் சென்றுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டெத் வேலி என்ற இடமே இதற்கு முன்னர் அதிக வெப்பநிலை கொண்ட இடமாக இருந்து வந்தது. அப்பகுதியில் சராசரியாக 134 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வந்தது. இந்நிலையில் உலகிலேயே வெப்பமயமான இடத்தில் ஈரானின் லூட் பாலைவனம் மற்றும் அமெரிக்காவில் உள்ள சோனோரன் பாலைவனம் ஆகியவையும் குறித்து ஆராயப்பட்டது.
இதில் 177 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை கொண்ட இடமாக லூட் பாலைவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக அதிக குளிர் நிலவும் பகுதியாக அண்டார்க்டிக்கா மைனஸ் 199 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு கடும் குளிர் நிலவுகிறது.