ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதி 99 ஆயிரத்து 122 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க அதன் இயக்குநரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இயக்குநரவைக் கூட்டம் அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் காணொலியில் இன்று நடைபெற்றது. நாட்டின் பொருளாதார நிலை, உள்நாட்டிலும் உலக அளவிலும் உள்ள சவால்கள், கொரோனா இரண்டாவது அலையின் பொருளாதாரப் பாதிப்பைத் தணிக்க ரிசர்வ் வங்கி எடுத்த கொள்கை முடிவுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது 2021 மார்ச் நிலவரப்படி ரிசர்வ் வங்கியிடம் குவிந்துள்ள உபரி நிதி 99 ஆயிரத்து 122 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு மாற்ற இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.