பாலியல் பலாத்கார வழக்கில் தெகல்கா இதழ் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலை விடுதலை செய்து கோவா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2013ஆம் ஆண்டு கோவாவில் விடுதியில் தங்கியிருந்தபோது தருண் தேஜ்பால் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவருடன் பணியாற்றிய பெண் குற்றஞ்சாட்டினார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தருண் தேஜ்பால் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கைக் கைவிடக் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை மும்பை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் தருண் தேஜ்பாலை விடுதலை செய்தது.