ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க 5 பில்லியன் டாலருக்கு இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி கடந்த 2019 ஆம் ஆண்டு ரஷ்யாவிடம் 800 மில்லியன் டாலர்களை இந்தியா செலுத்தியுள்ளது. இதனை அடுத்து இந்த ஆண்டின் இறுதியில் எஸ்-400 ரக ஏவுகணைகளை ரஷ்ய அரசு இந்தியாவிற்கு வழங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த எஸ்-400 ரக ஏவுகணை, தரையில் இருந்து வானில் பறந்து இலக்கை தாக்கும் வடிவமைப்பை கொண்டது ஆகும். ரஷ்யாவிடம் இந்த ஏவுகணைகளை வாங்கினால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா ஏற்கனவே இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்த து குறிப்பிடத்தக்கது.