புனேயைச் சேர்ந்த 16 வயது சிறுவன் சுமார் 50 ஆயிரம் படங்களுடன் நிலாவின் துல்லியமான தோற்றத்தை முப்பரிமாணத்தில் படம் பிடித்துள்ளார்.
இந்த படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.இந்த ஆய்வின் போது 186 ஜிபி சுமை தாளாமல் அவருடைய லேப் டாப் செயலிழந்தது. பிராத்தமேஷ் ஜாஜூ என்ற இந்த சிறுவன் தன்னை ஒரு அமெச்சூர் விண்வெளி ஆய்வாளராக அறிவித்துள்ளார்.
இணையத்தின் மூலமாக நிலவின் படங்களை சேகரிக்கத் தொடங்கிய அவர் பின்னர் அவற்றை முப்பரிமாணத் தோற்றத்தில் இணைத்து வடிவமைத்துள்ளார்.