உலக நாடுகளின் வேண்டுகோளால் அடுத்த 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் தெரிவித்துள்ளது.
நேற்றுடன் 10 நாட்களாக இருதரப்புக்கும் நடந்த மோதலில் 60 குழந்தைகள் உள்பட 220 பாலஸ்தீனர்களும், 22 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் நார்வே அகதிகள் கவுன்சில் பொதுச் செயலாளர் குழந்தைகள் உயிரிழப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் வெறிபிடித்த தாக்குதலால் குழந்தைகள் மனஉளைச்சலுக்கு ஆளாவதாகக் குறிப்பிட்ட அவர், குழந்தைகள் உயிரிழப்புக்கு இஸ்ரேல் அரசு, தளபதிகள், காசாவில் உள்ள ஹமாஸ் உள்ளிட்ட போராளி இயக்கங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.