இந்தியாவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்று வகையால் பிரிட்டனில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பி.1.617.2 எனப்படும் உருமாறிய கொரோனா வகை இந்தியாவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. இந்நிலையில் பிரிட்டனில் 86 மாவட்டங்களில் இந்த வகை கொரோனாவால் குறைந்தது ஐந்துபேரோ அதற்கு மேற்பட்டோரோ பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் இரண்டாயிரத்து 323 பேர் இந்த வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும், போல்டன், பிளாக்பர்ன் ஆகிய இடங்களில் பாதிப்பு அதிகமுள்ளதாகவும் மருத்துவத் துறை அமைச்சர் மேட் ஹேங்காக் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கு அதிகம் தொற்று பரவியுள்ளதால், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.