கொரோனா பரவல் அதிகரித்ததைப் பயன்படுத்தி கள்ளச் சந்தையில் ஆக்சிஜன், ரெம்டிசிவரின் விற்பனை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. இக்கடிதத்தில் ரெம்டிசிவருக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அதன் கள்ளச்சந்தை விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குப்பி 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல் ஆக்சிஜன் சிலிண்டர் 40 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
ரெம்டிசிவர், ஆக்சிஜன் இருந்தால்தான் கோவிட் நோயாளியை அனுமதிக்க சில மருத்துவமனைகள் கெடுபிடி காட்டுவதால் இவற்றின் சந்தை மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.