ஜம்மு காஷ்மீரை ஒட்டிய சர்வதேச எல்லை அருகே தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்ய டிரோன் விமானங்கள் மூலம் கொண்டு வரப்பட்ட ஏ.கே.47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து செலுத்தப்பட்ட ஆளில்லாத டிரோன் விமானத்தில் இருந்து வீசப்பட்ட ஒரு மஞ்சள் நிற பிளாஸ்டிக் பையில் இந்த ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இதே பகுதியில்தான் தீவிரவாதிகள் அமைத்த ரகசிய சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்ப்டடார்.