கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தினந்தோறும் 35ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்ற நிலையில், அதனை தடுக்கும் பொருட்டு, கடந்த 8-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பேரிடர் மேலாண்மை, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பினராயி விஜயன் நடத்திய ஆலோசனையில், முழு ஊரடங்கை வருகிற 23-ந் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் திருவனந்தபுரம், மலப்புரம், திரிச்சூர், எர்ணாகுளம் பகுதியில் மும்மடங்கு ஊரடங்கு விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.