சில மாநிலங்களில் இன்றும் நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மும்பை, நாக்பூர், கொச்சி, திருவனந்தபுரம், ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் ரம்ஜானை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது.
மேலும் சென்னை. அகமதாபாத், பெங்களூர், ஹைதராபாத் , டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதால் நாளை வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.