கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவருடன் சேர்ந்து பயன்படுத்தப்படும் தனது baricitinib மருந்தை இந்தியாவில் தயாரிக்க, லுபின், சிப்லா மற்றும் சன் பார்மாவுக்கு அமெரிக்க மருந்து நிறுவனமான 'எலி லில்லி' இலவச உரிமம் வழங்கி உள்ளது.
இரண்டாவது கொரோனா அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ இந்த முடிவை எடுத்ததாக எலி லில்லி தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் உதவி, இயந்திர உதவியுடனான சுவாச சிகிச்சை அல்லது எக்மோ கருவி பொருத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு, ரெம்டெசிவிருடன் சேர்ந்து baricitinib மருந்தை பயன்படுத்தும் அவசரகால அனுமதியை, அமெரிக்க மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு எலி லில்லிக்கு வழங்கி உள்ளது.