நாள்தோறும் ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்படைவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது .
இதுபற்றி பேசிய ரயில்வே வாரியத் தலைவர் சுநீத் சர்மா, எங்களிடம் மருத்துவமனைகள் உள்ளன என்றும் படுக்கை வசதிகளை அதிகரித்தது மட்டுமின்றி ரயில்வே மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் ஆலைகளை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் 4,000 படுக்கைகளில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நேற்று முன்தின நிலவரப்படி கடந்த மார்ச் மாதம் முதல் ஆயிரத்து 952 ரயில்வே ஊழியர்கள் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.