சட்டீஸ்கர் மாநிலத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளுக்கே சென்று மதுபானங்களை வழங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
சட்டீஸ்கரில் பொதுமுடக்கம் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் மதுபானம் கிடைக்காததால் ஆல்கஹால் கலந்த ஓமியோபதி syrup அருந்திய 9 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து தேவைப்படுவோருக்கு வீடுகளுக்கே சென்று மதுபானம் வழங்கும் முறையை அமல்படுத்தியுள்ளது. இதற்காக காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை குறிப்பிட்ட நேரத்தில் மதுபானங்களை ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. சட்டீஸ்கர் அரசின் முடிவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.