அசாம் முதலமைச்சர் சர்பானந்த் சோனோவால் ராஜினாமா செய்துள்ளார்.
ஆளுநர் ஜக்தீஷ் முகியிடம் அவர் ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமாவை அடுத்து அசாமின் புதிய முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வ சர்மா நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
அசாம் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும், யார் முதலமைச்சராவது என்பதில் சர்பானந்த் சோனோவாலுக்கும், ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இதை அடுத்து இந்த இருவரும் நேற்று டெல்லிக்கு வரவழைக்கப்பட்டனர். கட்சித்தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் நேற்று நடந்த நீண்ட ஆலோசனைக்குப் பிறகு ஹிமந்த் சர்மாவை முதல்வராக்குவது என கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.
இன்று குவஹாத்தியில் நடக்கும் என்டிஏ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் முறைப்படி முதலமைச்சராக தேர்வாகிறார்.