சீன நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசரகால அனுமதியை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது.
சீன மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும் செயல்திறன் மற்றும் தரத்தில் மேலானதாக இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இருமுறை செலுத்த வேண்டும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் மற்றொரு சீன நிறுவனமான சினோவாக் தயாரித்துள்ள மருந்துக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது சினோபார்ம் நிறுவன தடுப்பூசிக்கும் உலக சுகாதார நிறுவனம் அனுமதியளித்துள்ளது.