மேற்கு வங்கத்தில் சபாநாயகர் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பாஜக தெரிவித்துள்ளது.
அம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து சட்டப்பேரவைக்கான சபாநாயகர் தேர்தல் இன்று நடக்க உள்ளது.
இந்நிலையில் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். தங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும் வரை சட்டசபைக்கு செல்லப்போவதில்லை எனக் குறிப்பிட்டார்.
சபாநாயகர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகக் குறிப்பிட்ட அவர், சபை நடவடிக்கைகளிலும் பங்கேற்பதில்லை எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட வன்முறையில் திரிணாமூல் மற்றும் பாஜகவைச் சேர்ந்த 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.