கர்நாடகாவில் தனியார் மையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வோருக்கு Ivermectin, ஜிங்க் உள்ளிட்ட விட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவது ஏன் என்பது குறித்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் கொரோனா தொற்று மிகத்தீவிரமாக பரவி வருவதாகவும், ஒருவரின் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் தொற்று பல்கி பெருகிவிடும் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நாட்களில், கொரோனா பாதித்த 2-வது நாளே மூச்சுத்திணறல் ஏற்படுவதாலும் இந்த மாத்திரைகள் வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.