மகாராஷ்டிராவில் 21 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான யுரேனியத்தை பதுக்கி வைத்திருந்த கும்பலை மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
யுரேனியம் கடத்தியதாக மும்பை தானே பகுதியை சேர்ந்த ஜிகர் பாண்டியா என்பவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மான்குர்ட் புகார் பகுதியை சேர்ந்த அபு தாகீர் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அபு தாகீரையும் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 7 கிலோ 100 கிராம் யுரேனியத்தை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட யுரேனியம், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உயர் கதிர்வீச்சு கொண்ட இயற்கை யுரேனியம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.