கொரோனாவின் இரண்டாம் அலையில், மும்பையில் பல சிறார்கள் தொற்று பாதித்து இறந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வைரஸ் தொற்று பாதித்து மும்பை நகர மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட பல சிறார்கள் உயிரிழந்தனர்.
மும்பை சென்ட்ரலில் உள்ள பி.ஒய்.எல்.நாயர் மருத்துவமனையில் ஏப்ரல் 30 வரை சேர்க்கப்பட்ட 43 சிறார்களில் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர்.
இவர்களில் 3 பேர் கைக்குழந்தைகளாவர். மும்பை பாரல் வாடியா மருத்துவமனையில், இதே காலகட்டத்தில் 5 சிறார் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
மகாலட்சுமியில் உள்ள SRCC குழந்தைகள் மருத்துவமனையிலும் சிறார் மரணம் நிகழத் துவங்கி உள்ளது. இதுவரை மும்பையில் 10 வயதுக்கும் குறைவான 11 ஆயிரத்து 80 சிறார்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.