வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட மருத்துவப் பொருட்களுடன் இந்திய கடற்படையினர் ஏழு போர்க்கப்பல்கள் இந்தியாவுக்கு வர உள்ள நிலையில் முதல் கப்பல் தல்வார் பஹ்ரைனில் இருந்து மங்களூர் துறைமுகத்திற்கு நேற்று வந்து சேர்ந்தது.
இதில் 54 டன்கள் திரவ மருத்துவ ஆக்சிஜன் இரண்டு பெரிய கியோஜனிக் கண்டெய்னர்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே ஐராவதம் என்ற மற்றொரு போர்க்கப்பல் சிங்கப்பூரில் இருந்து 3ஆயிரத்து 600 சிலிண்டர்களையும் 27 டன்கள் ஆக்சின் டேங்க்குகளையும் கொரோனா பரிசோதனைக் கருவிகளையும் ஏற்றிக் கொண்டு இந்தியாவுக்கு வந்துக் கொண்டிருக்கிறது.
கொல்கத்தா என்ற மற்றொரு போர்க்கப்பல் குவைத்தில் இருந்து 27 டன்கள் ஆக்சிஜன் டேங்க்குகள். 400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் 47 செறிவூட்டல் கருவிகள் ஆகியவற்றை குவைத்தில் இருந்து ஏற்றிக் கொண்டு இந்தியாவுக்குத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.