மருத்துவ துறையினருக்கு கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்காக கடன் வழங்க, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி 50 ஆயிரம் கோடியை உடனடியாக ஒதுக்க உள்ளது. இந்த கடன் தொகையை 3 ஆண்டுகளுக்கு வங்கிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தடுப்பூசி தயாரிப்பாளர்கள், தடுப்பூசி மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆய்வகங்கள், ஆக்சிஜன்-வென்டிலேட்டர் தயாரிப்பாளர்கள்-விநியோகஸ்தர்கள், இவர்களுடன் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைக்கும் கடன் வழங்க இந்த தொகை பயன்படுத்தப்படும் என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.