பீகாரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னர் முழு ஊரடங்கு முடிவு எடுக்கப்பட்டதாக டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழு ஊரடங்கிற்கான வழிகாட்டல்களை உருவாக்க நெருக்கடிகால நிர்வாக குழு ஒன்றையும் ஏற்படுத்தி உள்ளதாக நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகாரில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. இறப்பு எண்ணிக்கையும் நூறை நெருங்குவதால் முழு ஊரடங்கை அமல்படுத்த பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.