ஒட்டுமொத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொரோனா தனிமையில் இருப்பதால் நாளை ராஜஸ்தான் ராயல்சுடன் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
அணியின் மேலாளர், பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் அணியின் பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், ஒட்டு மொத்த அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களான வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால் நேற்று ஆர்சிபி-(RCB) யுடன் நடக்க இருந்த போட்டி ரத்தானது. இந்த இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.