நாடு முழுவதும் 20ஆக்சிஜன் ரயில்கள் மூலம் இதுவரை ஆயிரத்து 125 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, அரியானா மற்றும் தெலுங்கானாவில் திரவ ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 7 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 422 டன் திரவ ஆக்சிஜனை சுமந்து சென்றுள்ளதாகவும் அதில் டெல்லிக்கு 3-வது முறையாக ஒரு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் 120 டன் ஆக்சிஜனை சுமந்து சென்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.