கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர்சிங் பிரதமர் மோடியை சந்தித்தார். கோவிட் தடுப்புப் பணியில் கடற்படையினரின் பங்கை குறித்து அவர் பிரதமரிடம் விளக்கம் அளித்தார்.
மருத்துவமனைகளுக்குத் தேவையான படுக்கைகள், மருத்துவ சாதனங்களை மாநில அரசுகளுக்குக் கொண்டு செல்ல கடற்படை ஆற்றி வரும் பணியை அவர் விளக்கினார்.
பஹ்ரைன், கத்தார், குவைத், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை கடற்படையினர் இந்தியாவுக்கு கொண்டு வருவதில் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
அதே போல் அந்தமான், நிகோபார் உள்ளிட்ட தீவுகளுக்கு மருத்துவப் பொருட்களைக் கொண்டு செல்லவும் கடற்படை முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.