தங்களது தடுப்பூசிக்கு அதிவிரைவு ஒப்புதல் கிடைக்க இந்திய அரசுடன் பேசி வருவதாக அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் தெரிவித்துள்ளது.
பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து ஃபைசர் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவிலும் அதன் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கோரி சில மாதங்களாக காத்திருப்பதாக ஃபைசர் நிறுவன சிஇஓ ஆல்பர்ட் போர்லா(Albert Bourla) தெரிவித்துள்ளார்.
மேலும் தாமதப்படுத்தாமல் அவசரகால பயன்பாட்டுக்கு அதிவிரைவு ஒப்புதல் வழங்க இந்திய அரசுடன் பேசி வருகிறோம் என்று அவர் சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு 511 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை ஃபைசர் நிறுவனம் நன்கொடையாக வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்