ஆக்சிஜன் செறிவூட்டிகளை தனிநபருக்கு இறக்குமதி செய்ய மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும் இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளிலிருந்து கூரியர் மற்றும் இ காமர்ஸ் மூலம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்துகொள்ள வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது.
தனிநபர்கள் அவசர தேவைக்காக வரும் ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை வெளிநாடுகளில் உள்ள இணையவழி வர்த்தக நிறுவனம் மூலம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கிக்கொள்ளலாம் என்றும், பரிசு பொருட்கள் இறக்குமதி என்ற பிரிவின் கீழ் சுங்கத்துறை இதற்கு அனுமதி அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.