கொரோனாவுக்கு எதிரான போரில் ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து செயல்படும் என ரஷ்யத் தூதர் நிக்கோலாய் குடசேவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக் தடுப்பு மருந்து அனுப்பியது, மக்களின் உயிர்களைக் காக்க அரசுக்கு இது உதவும் எனத் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மருந்துகளிலேயே செயல்திறன் மிக்கது ஸ்புட்னிக் என்றும், இது புதுவகையான கொரோனா தொற்றையும் தடுக்கும் திறன் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இந்த மருந்தின் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்றும், ஆண்டுக்கு 85 கோடி டோஸ் என்கிற அளவு வரும் வரை உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.