கொரோனா தடுப்பு மருந்தான மடர்னாவை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகிக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கடந்த ஆண்டு டிசம்பரில் மடர்னா தடுப்பூசிக்கான அவசரப் பயன்பாட்டு அங்கீகாரத்தை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றியம் மாடர்னா தடுப்பூசியை அங்கீகரித்தது.
இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் நோய்த் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் குழு நடத்திய ஆய்வில் மடர்னா தடுப்பூசி 94 விழுக்காடு அளவிற்கு செயல்திறன் இருப்பதாக கண்டறிந்துள்ளது.
இதையடுத்து ஃபைசர் பயோஎன்டெக், அஸ்ட்ராஜெனெகா, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் ஜான்சன் நிறுவன தடுப்பூசிகளைத் தொடர்ந்து மடர்னாவையும் அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகிக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.