தடுப்பூசியின் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தடுப்பூசிகளில் மத்திய அரசுக்கு ஒருவிலை, மாநில அரசுகளுக்கு ஒருவிலை என இரு விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏன் என்றும், தனியார் நிறுவனங்கள் நிர்ணயம் செய்தால் விலை எப்படி ஒரே மாதிரியாக இருக்கும்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தடுப்பூசி விநியோகத்தின் கட்டுப்பாடு அனைத்தும் மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.