கொரோனா 2ஆவது அலையை எதிர்கொள்ள அரசின் அனைத்து அங்கங்களும் ஒருங்கிணைந்து, துரிதமாகப் பணியாற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா நிலவரம் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் அவரவர் சார்ந்த மண்டலங்களில் பொதுமக்களுடன் தொடர்பில் இருக்குமாறும், பிரச்சனைகளை அடையாளங் கண்டு உள்ளூர் அளவிலேயே உரிய தீர்வு காணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய அரசும், மாநில அரசுகளும் கடந்த 14 மாநிலங்களில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதேபோல, மருத்துவக் கட்டமைப்புகள், ஆக்சிஜன் வசதிகளை ஏற்படுத்துவது, ஏழைகளுக்கு தேவையான உதவிகள் அளிப்பதில், மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றியது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.