கொரோனாவுடன் போராடும் இந்தியாவுக்கு மருத்துவ உதவி வழங்க 40 நாடுகள் முன்வந்துள்ளன என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடுகளிலும் உள்ள இந்திய தூதர்களுடன் கொரோனா நிலவரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆக்சிஜன் பெறுவதற்கு எல்லா நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துமாறு தூதர்களை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் 40 நாடுகள், இந்தியாவுக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளதாக சம்பந்தப்பட்ட தூதர்கள் தெரிவித்ததாக ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி வழங்கி உதவியதன் பலனாக மேலும் பல நாடுகள் இப்போது இந்தியாவுக்கு உதவ முன்வரும் என எதிர்பார்ப்பதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.