அகமதாபாத்தில் கொரோனா சிகிச்சை மருத்துவமனைக்கு இந்திய கடற் படையைச் சேர்ந்த 57 பேர் கொண்ட மருத்துவக் குழு அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று அகமதாபாத் சென்றடைந்த இந்தக் குழுவில், 4 மருத்துவர்கள், 7 செவிலியர், 26 மருத்துவப் பணியாளர்கள், 20 மருத்துவ உதவியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர், கொரோனா சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பார்கள்.
கடற்படை மருத்துவக் குழு அங்கு இரண்டு மாத காலத்திற்குப் பணியாற்ற உள்ளதாகவும், தேவைப்பட்டால் பணிக்காலம் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.