ரஷ்யா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ருமேனியா உள்ளிட்ட நாடுகள் அனுப்பி வைத்த மருந்துகள், மருத்துவ உதவிகள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன.
120 ஆக்சிஜன் செறிவூட்டும் சாதனங்கள், வெண்டிலேட்டர்கள் போன்ற 20 டன்கள் கொண்ட மருத்துவ உதவியை சுமந்து இரண்டு இங்கிலாந்து விமானங்கள் நேற்று டெல்லி வந்தன.
இவை டெல்லி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக ரஷ்யாவுக்கான இந்திய தூதர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இத்துடன் ஸ்புட்னிக் வி தடுப்பூசி டோஸ்களும் இந்தியாவிடம் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதனை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பையும் ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கி உள்ளது.
இதே போல் ரோமானியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்த பல்வேறு உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.