செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

திரைப்பட இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்

Apr 30, 2021 03:20:34 PM

பிரபல திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 54

பத்திரிகைகளுக்கு புகைப்படம் எடுக்கும் கலைஞராக தமது வாழ்வைத் தொடங்கியவர் கே.வி.ஆனந்த். பிரபல தமிழ் ஆங்கில இதழ்களில் பணியாற்றிய அவர் ,1994ம் ஆண்டில் மோகன்லால் நடித்த தென்மாவின் கொம்பத்து மலையாளப் படத்துக்கு ஒளிப்பதிவாளரானார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதையும் பெற்றார். தொடர்ந்து மலையாளம் தெலுங்குப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அவர் காதல் தேசம் படத்தில் ஒளிப்பதிவாளரானார்.

ஷங்கரின் முதல்வன், ரஜினி நடித்த சிவாஜி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஆனந்த், 2005ம் ஆண்டு கனா கண்டேன் மூலம் இயக்குனரானார்.

அயன் படத்தை இயக்கிய கே.வி.ஆனந்தின் திரையுலக வாழ்வில் முக்கியத் திருப்பமாக அப்படம் அமைந்தது.

மாற்றான், காப்பான், அனேகன், கோ , விஜய் கவண் உள்ளிட்ட வெற்றிப் படங்களையும் இயக்கிய கே.வி.ஆனந்த் தமது தொழில்நுட்பத் திறனாலும் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் விதத்தாலும் தனி முத்திரை பதித்தார்.

மாரடைப்பு காரணமாக 54 வயதிலேயே உயிரிழந்த கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்

 


Advertisement
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் தொடக்கம்..
போதை பொருட்கள் வைத்திருந்ததாக தனியார் கல்லூரி மாணவர்கள் கைது.!
விழுப்புரம் அருகே வாகன சோதனையின் போது 491 கிலோ குட்கா பறிமுதல் - ஓட்டுனர் தப்பி ஓட்டம்
அ.தி.மு.க. நிர்வாகிக்கு வெட்டு, தி.மு.க. கவுன்சிலர் கணவர் கைது..
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த "கருப்பி" என்ற பெண் சிப்பிபாறை நாய் பேருந்து மோதி உயிரிழப்பு.!
பிரியாணியில் புழு இருந்த விவகாரம் - உணவகத்திற்கு அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத்துறை.!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண்ணின் லேப்டாப் பையை திருடிச் சென்ற நபர் - சிசிடிவி காட்சி பதிவு
கொடைக்கானல் அருகே மன்னவனூர் கிராமத்தில் விநியோக்கப்பட்ட கருப்பு நிற குடிநீர் - மக்கள் குற்றச்சாட்டு
திருச்செந்தூர் கோயிலுக்கு அடுத்தாண்டு ஜூலை 7 ஆம் தேதி குடமுழுக்கு என அறநிலையத்துறை அறிவிப்பு !!
நாகை-இலங்கைக்கு வாரத்திற்கு 5 நாள் கப்பல் இயக்கப்படும் - நாகை துறைமுகம்

Advertisement
Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?


Advertisement