திருப்பதியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், தொற்று உறுதியானவர்களில் ஆயிரத்து 49 பேர் மாயமாகி விட்டதால், அரசு அதிகாரிகளும், உள்ளூர் மக்களும் பீதி அடைந்துள்ளனர்.
இவர்களில் பலர் வெளியூர்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதன் அடிப்படையில் அந்தந்த பகுதியில் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல்அனுப்பப்பட்டது.
ஆனால் அதிர்ச்சியளிக்கும் செய்தியாக அவர்களில் 1049 பேர் மாயமாகிவிட்டனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் அளித்த முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை ஆய்வு செய்த போது அவை போலியானவை என்று தெரியவந்துள்ளதால், அதிர்வலை உருவாகியுள்ளது.