கொரோனா தொற்றால் மருத்துவமனையில் உயிரிழந்தவரின் உடலை ஒப்படைக்க லஞ்சம் கேட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுகாதார ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் உடலை ஒப்படைக்க அவரின் குடும்பத்தினரிடம் 19 ஆயிரம் ரூபாய் கேட்டதாக மாங்காடு சுகாதார ஆய்வாளர் சுந்தரேச பெருமாள், தோமையார்மலை சுகாதார ஆய்வாளர் தசரதன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இது குறித்துத் தகவல் அறிந்த ஓமந்தூரார் மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப் பொதுசுகாதாரத்துறை இயக்குநருக்குப் பரிந்துரைத்தார்.
அதனடிப்படையில் விசாரணை நடத்தியபின் இருவரையும் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.