கொரோனா தடுப்பூசிகள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்யக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஒன்றாம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு அனுமதி அளித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோசுக்கு 1200 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என கூறப்படுவதால், தடுப்பூசி போடுபவர்களுக்கு அது சுமையாக இருக்கும் என கருதப்படுகிறது.
எனவே ஒரு நிவாரணம் என்ற நிலையில், தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு ஜிஎஸ்டி கவுன்சிலின் அனுமதி அவசியம் என்றாலும், அரசின் இந்த முடிவுக்கு அங்கு எந்த எதிர்ப்பும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.