ஆக்சிஜனுக்கு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவுவதைப் பயன்படுத்தி சில போலி நிறுவனங்கள் ஆக்சிஜன் கருவிகளை விற்பதாகக் கூறி பணம் சம்பாதித்து வருகின்றன.
போலியான ஆக்சிஜன் கருவிகளை இந்த போலி நிறுவனங்கள் சமூக ஊடகங்கள், வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமாக Nebulizers, humidifiers போன்றவற்றை ஆக்சிஜன் என்று விற்பனை செய்து வருகின்றன.
இவை நோயாளிகளின் உயிர்களைக் காக்க உதவாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தரமான மருத்துவச் சான்று பெற்ற ஆக்சிஜன் சாதனங்களையே உபயோகப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.