கொரோனா பாதிப்புடன் வரும் நோயாளிகளை 10 அல்லது 15 நிமிடங்களில் அனுமதியளித்து, அவர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை வழங்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு புதிய நோயாளியை மருத்துவமனைகள் ஏற்றுக் கொள்ள ஒரு பழைய நோயாளியைக் கொலை செய்ய வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்.
டெல்லி அரசின் உத்தரவால் மருத்துவமனைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் ஏற்கனவே ஆக்சிஜனுக்காக போராடும் நோயாளிகள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், டெல்லி அரசின் பிரச்சனையைத்தான் இந்த உத்தரவு பிரதிபலிப்பதாகவும், நடைமுறை யதார்த்தம் புரியாத உத்தரவுகளை எதற்காக பிறப்பிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர்.